பா.ஜ., கூட்டணிக்கு வாய்ப்பில்லை: த.வெ.க., நிர்மல்குமார் உறுதி

சென்னை : த.வெ.க., துணை பொதுச்செயலர் நிர்மல்குமார் அளித்த பேட்டி:
வக்ப் திருத்த சட்டம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகள் வழக்கு தொடர்ந்துள்ளன. இதில், த.வெ.க., தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய, தி.மு.க., அரசு இதை கண்டு கொள்ளவில்லை. தீர்மானம் போட்டு, வீட்டில் வைத்துக் கொண்டால் எதுவும் நடக்காது. வழக்கில், தமிழக அரசு தன்னை இணைத்துக் கொண்டிருக்க வேண்டும். எல்லா விஷயத்திலும் மக்களை ஏமாற்றுவது போல், இந்த விஷயத்திலும் தி.மு.க., நாடகமாடி ஏமாற்றுகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டு தி.மு.க.,வினர் பயப்படுகின்றனர்.
கவர்னர் ரவியை மிகப்பெரிய எதிரிபோல் சித்தரித்து, போராட்டம் நடத்துகின்றனர். கட்சியின் முதல் மாநாட்டிலேயே, பா.ஜ., எங்கள் கொள்கை எதிரி என தலைவர் விஜய் அறிவித்து விட்டார். எனவே, அந்த கட்சியுடன் கூட்டணி இல்லை.
இவ்வாறு கூறினார்.
மேலும்
-
படுத்துக்கொண்டே ஜெயிக்கும் வித்தையை கற்றுக் கொடுத்தேன்: ராமதாஸ் பேட்டி
-
இப்படியொரு வலிமையான கட்சியை பார்த்ததே இல்லை; பா.ஜ.,வை சொல்கிறார் சிதம்பரம்
-
அதிபர் டிரம்ப்புக்கு கொலை மிரட்டல்; முன்னாள் எப்.பி.ஐ., இயக்குநரிடம் விசாரணை
-
டில்லியில் சரிந்து விழும் நிலையில் 4 மாடி கட்டடம்: அப்புறப்படுத்தும் பணி தீவிரம்
-
நீர்த்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை; உதவி இயக்குநரிடம் ரூ.1.02 லட்சம் பறிமுதல்
-
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,560 குறைவு; இன்று ரூ.880 அதிகரிப்பு