டாஸ்மாக்கை மாற்ற மறியல் 'குடி 'மகன்களும் போராட்டம்
அஞ்செட்டி: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே நாட்றாம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே இயங்கிய டாஸ்மாக் கடை, மக்களின் போராட்டத்தால், புதுார் கிராமம், கூசப்பன்கொட்டாய் பஸ் ஸ்டாப் அருகே நேற்று காலை இடம் மாற்றப்பட்டது. மதியம், 12:00 மணிக்கு கடையை திறந்தனர்.
பஸ் ஸ்டாப் அருகே கடை உள்ளதால், பத்திகவுண்டனுார் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி, அக்கிராம மக்கள், அஞ்செட்டி - ஒகேனக்கல் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடை மூடப்பட்டது.
இதற்கிடையே, கடையால் எந்த இடையூறும் இல்லை என்றும், கடையை திறக்க வலியுறுத்தி, குடிமகன்கள் போராட்டத்தில் குதித்தனர். இருதரப்பினரிடமும் அஞ்செட்டி போலீசார் பேச்சு நடத்தினர். உயரதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், போராட்டம் முடிவுக்கு வந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
10ம் வகுப்பு 'ரிசல்ட்' வெளியானது: 93.80% மாணவ, மாணவிகள் தேர்ச்சி
-
பஞ்சாப் எல்லையில் பாக்., ட்ரோன் மீட்பு
-
2026 மட்டுமல்ல 2031, 2036ம் ஆண்டிலும் தி.மு.க., ஆட்சி தான்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சீனாவில் திடீர் நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
-
சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
-
நீரவ் மோடியின் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம்
Advertisement
Advertisement