இந்தியாவில் பாக்., கொடி விற்பனை: ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

புதுடில்லி: நமது நாட்டில் ஆன்லைன் இணையதளம் மூலம் பாகிஸ்தான் தேசியக் கொடி, அந்நாட்டின் சின்னங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ததாக அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ' ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
இச்சூழ்நிலையில், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பாகிஸ்தான் கொடி மற்றும் சின்னங்களை இந்தியாவில் விற்பனை செய்வதாக மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் பிரஹலாத் ஜோஷிக்கு அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு கடிதம் மூலம் புகார் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் கொடிகள் மற்றும் அந்நாட்டு நினைவுச்சின்னங்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக அமேசான் இந்தியா, பிளிப்கார்ட், உபயு இந்தியா, தி பிளாக் நிறுவனம் மற்றும் தி பிளாக் கழகம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நுகர்வோர் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதுபோன்ற செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் இந்த பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்துவதுடன், நாட்டின் சட்டங்களை மதிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.



மேலும்
-
டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டி: நீரஜ் சோப்ரா புதிய சாதனை
-
செஸ்: பிரக்ஞானந்தா 'டிரா'
-
பைனலில் இந்திய அணி * தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில்...
-
இந்திய பெண்கள் 'வெண்கலம்' * ஆசிய பீச் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப்பில்...
-
பைனலில் பிராத்தனா ஜோடி
-
'பிளே ஆப்' செல்லுமா பெங்களூரு * பிரிமியர் தொடர் மீண்டும் துவக்கம்