செஸ்: பிரக்ஞானந்தா 'டிரா'

புக்காரெஸ்ட்: கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசனின், இரண்டாவது தொடர் ருமேனியாவில் நடந்தது. எட்டு சுற்று முடிவில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, 5.0 புள்ளியுடன் முதலிடத்தில் இருந்தார்.
இதன் 9வது, கடைசி சுற்று போட்டி நேற்று நடந்தன. பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் லெவான் ஆரோனியன் மோதினர். இதில் வென்றால் சாம்பியன் ஆகலாம் என்ற நிலையில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 43வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.
இந்தியாவின் குகேஷ், அமெரிக்காவின் லெவான் ஆரோனியன் மோதிய மற்றொரு போட்டி 'டிரா' ஆனது. பிரான்சின் மேக்சிம் வாசியர், போலந்தின் ஜான் டுடாவை வென்றார்.
9 சுற்று முடிவில் பிரக்ஞானந்தா, பிரான்சின் வாசியர், அலிரேசா என மூவரும் தலா 5.5 புள்ளி பெற்றனர். வெற்றியாளரை முடிவு செய்ய 'டை பிரேக்கர்' நடந்தது. குகேஷ் (4.0) 9வது இடம் பெற்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
சென்னையில் 2 நாட்கள் புறநகர் ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
-
தேர்வில் முறைகேடு புகார் அதிகாரிகள் விசாரணை
-
500 கிலோ குட்கா கடத்திய இருவர் கைது
-
பஸ்சில் இருந்து விழுந்து எஸ்.எஸ்.ஐ., பலி
-
'எங்க கூட்டணியில் ஓ.பி.எஸ்., இருக்கிறார்' பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதி
Advertisement
Advertisement