தேசிய சட்டப்பல்கலையின் சிறப்பு பேராசிரியராக சந்திரசூட் நியமனம்

1

புதுடில்லி: தேசிய சட்டப் பல்கலையின் சிறப்பு பேராசிரியராக சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் நியமிக்கப்பட்டு உள்ளார்.


இது தொடர்பாக டில்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது; பல்கலைக்கு சிறப்பு பேராசரியராக வருகை தரும் சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி டி ஓய் சந்திரசூட்டை வரவேற்பதில் பெருமை கொள்கிறோம் எனத் தெரிவித்து உள்ளார்.


துணை வேந்தர் ஜிஎஸ் பஜ்பாய் கூறியதாவது; சந்திரசூட் நியமனம், இந்திய சட்டக் கல்வியில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது என்ற அத்தியாயத்தை குறிக்கிறது. நமது முற்போக்கான நீதிபதிகளில் ஒருவர், அடுத்த தலைமுறையினரை வழிகாட்ட உள்ளார். அவரின் வருகையால் கல்விச் சூழல் மேம்படும். இவ்வாறு அவர் கூறினார்.


சந்திரசூட் வருகையால், பல்கலையில் அரசியலமைப்பு படிப்புகளுக்காக தனி மையம் அமைக்க சட்டப்பல்கலை முடிவு செய்துள்ளது. இங்கு ஆராய்ச்சி பணிகளை அவர் முன்னெடுத்துச் செல்வார். சந்திரசூட் அளித்த தீர்ப்புகள் தொடர்பாக சிறப்பு கருத்தரங்கு ஒன்றுக்கும் சட்டப்பல்கலை ஏற்பாடு செய்துள்ளது.


யார் இவர்


2000 ம் ஆண்டு மும்பை ஐகோர்ட்டின் நீதிபதியாக பணியாற்றினார்.

2013 ல் அலகாபாத் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆனார்.

2016 மே 13 ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம்.

2022 ல் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக நியமனம்.

2024 நவ., மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

அரசியல்சாசன அமர்வில் இடம்பெற்று இருந்த சந்திரசூட் அயோத்தி விவகாரம், தனியுரிமை, காஷ்மீர் சிறப்பு சட்டம் உள்ளிட்ட வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவர் ஆவார்.

Advertisement