ஸ்ரீ சத்குருநாத முனிவரின் 106வது ஆண்டு குருபூஜை

கோத்தகிரி: கோத்தகிரி நடுஹட்டி கிராமத்தில் ஸ்ரீ சத்குருநாத மகா முனிவரின், 106 வது ஆண்டு குருபூஜை சிறப்பாக நடந்தது.

ஸ்ரீ அகத்திய மாமுனிவரின் மரபில், ஒன்பதாவது முனிவராக அவதரித்த ஸ்ரீ ஸ்ரீ சத்குருநாதர் மகா முனிவரின் குருபூஜை திருவிழா நடுஹட்டி கிராமத்தில் நடந்தது.

காலை, 10:00 மணிக்கு, ஸ்ரீ சத்குரு நாதர் சமய கொடி ஏற்றப்பட்டு விழா துவங்கியது. தொடர்ந்து, 11:00 மணிக்கு, மந்திர உச்சாடனை, சிறப்பு பூஜை, தேவார பாடல் பஜனை இடம் பெற்றது. பகல், 1:00 மணிக்கு, ஸ்ரீ சற்குருநாதர் மகா முனிவரின் திரு உருவப்படம் வீதி உலா நடந்தது.

தொடர்ந்து, 2:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பிற்பகல், 3:00 மணிக்கு, பிருந்தாவன ஆடல் பாடல் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு மங்கள ஆரத்தியுடன், விழா நிறைவடைந்தது.

Advertisement