ரூ.25,000 லஞ்சம் : ஆர்.ஐ., சிக்கினார்

பெரம்பலுார்: பெரம்பலுார், ஆலம்பாடி ரோடு பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி, 40. இவர் புதிதாக தான் கட்டிய வீட்டிற்கு வீட்டு வரி ரசீது பெற, பெரம்பலுார் நகராட்சி அலுவலகத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்தார். பெரம்பலுார் நகராட்சி வருவாய் ஆய்வாளராக பணியாற்றும், புதுக்கோட்டை மாவட்டம், சின்னஅய்யன்வயல் பகுதி கண்ணன், 53, வரி ரசீது வழங்க, 25,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.

மகேஸ்வரி தன் உறவினர், மெய்யன் என்பவரிடம் தெரிவித்தார். மெய்யன், லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்தார். நேற்று காலை, மெய்யன் வீட்டில் வைத்து, கண்ணனிடம், 20,000 ரூபாயை லஞ்சமாக கொடுத்தார். அங்கு மறைந்திருந்த பெரம்பலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார், கண்ணனை கைது செய்தனர்.

Advertisement