'கிரைண்டர் ஆப்'பில் பழகி மொபைல், டூ வீலர் பறிப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலியில், ஓரின சேர்க்கையாளர்களின் கிரைண்டர் ஆப் வாயிலாக வாலிபருடன் நட்பாக பழகி, அவரை தனியாக வரவழைத்து மொபைல்போன், டூ வீலரை பறித்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி, மானுாரை சேர்ந்த வாலிபர் ஒருவர், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் ஒரு கம்பெனியில் பணிபுரிகிறார். இவர் திருமலைக்கொழுந்துபுரத்தை சேர்ந்த முத்துக்குமார், 22, என்பவருடன் கிரைண்டர் ஆப் வாயிலாக நட்பாக பழகினார். இது ஓரினச்சேர்க்கையாளர்களை ஒன்றிணைக்கும் செயலி.
தனியாக வந்த அந்த வாலிபரை முத்துக்குமார், நண்பர்கள் நல்லமுத்து, 24, ராஜவல்லிபுரம் ஜெயராம், 21, ஆகியோர் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி, அவரிடம் இருந்து பணம் பறிக்க முயன்றனர். பணம் இல்லாததால், அவர் வைத்திருந்த மொபைல் போன், டூ வீலரை பறித்துக் கொண்டனர். அவர்களிடமிருந்து தப்பிய வாலிபர், போலீசில் புகார் செய்தார். முத்துக்குமார் உள்ளிட்ட மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும்
-
தமிழில் 93 மதிப்பெண் எடுத்த பீஹார் மாணவி; குவிகிறது பாராட்டு!
-
பா.ம.க.,வில் நெருக்கடிக்கு சுமுக தீர்வு வரும்: ஜி.கே.மணி நம்பிக்கை
-
பெண் கொலை: போலீசார் விசாரணை
-
புளோரிடா விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து: விமான நிலையம் மூடல்
-
4 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல்
-
அந்த மனசு தான் சார் கடவுள்; காஷ்மீரில் வீடு வீடாகச் சென்று உதவி செய்யும் ராணுவத்தினர்!