பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அமலோற்பவம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

புதுச்சேரி: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி 32ம் ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
புதுச்சேரி, வாணரப்பேட்டையில் உள்ள அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 678 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம், இப்பள்ளி 32ம் ஆண்டாக 100 சதவீத தேர்ச்சியை தக்க வைத்துள்ளது.
மாணவர் குமரன், மாணவி சின்மதி ஆகியோர் 496 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தையும், மாணவி பூமிகா 493 மதிப்பெண் பெற்று 2ம் இடத்தையும், மாணவி பூஜை 491 மதிப்பெண் பெற்று 3ம் இடத்தை பிடித்துள்ளனர்.
பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களில் 502 பேர் 75 சதவீதத்துக்கு மேலும், 152 பேர் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் தலா 14 பேரும், பிரெஞ்சில் 12 பேரும், ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் தலா ஒருவரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பள்ளி அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தாளாளர் லுார்துசாமி சால்வை அணிவித்து, பூங்கொத்து அளித்து வாழ்த்தினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், பள்ளியில் முதலிடம் பிடித்த குமரன், சின்மதி ஆகியோருக்கு 4 கிராம் தங்க நாணயம் முழு ஸ்காலர்ஷிப் ஏற்கப்படுகிறது. 2ம் இடம் பிடித்த மாணவி பூமிகாவுக்கு 2 கிராம் தங்க நாணயம் 75 சதவீத ஸ்காலர்ஷிப், 3ம் இடம் பிடித்த மாணவி பூஜாவுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாகவும், 50 சதவீதம் ஸ்காலர்ஷிப் வழங்கப்படும்.
100 சதவீத தேர்ச்சி அளித்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டுக்கள்' என்றார்.
மேலும்
-
புனே வெடிகுண்டு வழக்கில் தேடப்படும் 2 ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிக்கினர்!
-
தமிழில் 93 மதிப்பெண் எடுத்த பீஹார் மாணவி; குவிகிறது பாராட்டு!
-
பா.ம.க.,வில் நெருக்கடிக்கு சுமுக தீர்வு வரும்: ஜி.கே.மணி நம்பிக்கை
-
பெண் கொலை: போலீசார் விசாரணை
-
புளோரிடா விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து: விமான நிலையம் மூடல்
-
4 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல்