10ம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் சாதனை ஏ.கே.டி., பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் சாதனை புரிந்த கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி மாணவர்கள் கவுரவிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பலர் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை புரிந்துள்ளனர். மாணவர் மோகனேஷ் 494 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடமும், பள்ளியில் முதலிடத்தை பிடத்துள்ளார். இவர், தமிழ் 98, ஆங்கிலம் 98, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 98 மதிப்பெண் எடுத்துள்ளார்.
மாணவர் நவீன் 492 மதிப்பெண் பெற்று பள்ளியில் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.
இவர் தமிழ் 96, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 98, சமூக அறிவியல் 99 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவிகள் பவ்யஸ்ரீ, தங்கதாரணி 491 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம், மாணவி சிபியா 490 மதிப்பெண் பெற்று நான்காமிடம் பிடித்துள்ளார்.
கணிதத்தில் 6 பேரும், அறிவியலில் 7 பேர், சமூக அறிவியல் ஒருவர் சென்டம் மதிப்பெண் எடுத்துள்ளனர். மொத்த மாணவர்களில் 5 பேர் 490க்கு மேல், 29 பேர் 480க்கு மேல், 65 பேர் 470க்கு மேல், 130 பேர் 450க்கு மேல், 234 பேர் 400க்கு மேல், 276 பேர் 375க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சாதனை புரிந்த மாணவர்களை பள்ளி தாளாளர் மகேந்திரன், செயலாளர் லட்சுமி பிரியா, நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், இணை இயக்குனர் அபிநயா ராஜேந்திரன் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கி கவுரவித்தனர். பள்ளி முதல்வர் வெங்கட்ரமணன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் உடனிருந்தனர்.
மேலும்
-
புனே வெடிகுண்டு வழக்கில் தேடப்படும் 2 ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிக்கினர்!
-
தமிழில் 93 மதிப்பெண் எடுத்த பீஹார் மாணவி; குவிகிறது பாராட்டு!
-
பா.ம.க.,வில் நெருக்கடிக்கு சுமுக தீர்வு வரும்: ஜி.கே.மணி நம்பிக்கை
-
பெண் கொலை: போலீசார் விசாரணை
-
புளோரிடா விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து: விமான நிலையம் மூடல்
-
4 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல்