ஆல்பா மேல்நிலைப்பள்ளி சாதனை தொடர்ந்து 26 ஆண்டுகளாக 100 சதவீதம்

புதுச்சேரி: புதுச்சேரி ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து 26வது ஆண்டாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
மாணவர் யுகேஷ்குமார் 496 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம், மாணவர் சுமனேஷ், மாணவி பாத்திமா அக்ஸா ஆகியோர் 495 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்தனர்.
485 மதிப்பெண்களுக்கு மேல் 5 மாணவர்கள் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 7 பேர், சமூக அறிவியலில் 6 பேர், கணிதத்தில் ஒரு மாணவர், பிரெஞ்சு பாடத்தில் 5 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
ஆங்கிலத்தில் 4 பேரும், அறிவியலில் 2 பேர் 100க்கு 99 மதிப்பெண் பெற்றுள்ளனர். இப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் மாணவி காயத்திரி 594 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் மூன்றாமிடம், மாணவி தீபிகா 593 மதிப்பெண் பெற்று பள்ளியளவில் இரண்டாமிடம், மாணவர் லோகரஞ்சன் 592 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு எழுதிய 424 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளியில் கடந்தாண்டு பிளஸ் 2 முடித்த மாணவர் பரத், என்.ஐ.டி.யில் பி.டெக்., கம்பியூட்டர் சயின்ஸ் சேர்ந்துள்ளார். மாணவர்கள் இளங்கோவன், அப்துல் அபிப், ஜெகன், திருகுமரன், பிரியதர்ஷின் ஆகியோர் ஜிப்மர், கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவ கல்லுாரி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர்.
மாணவர்கள் மனோஜ், தினேஷ்குமார், கோபிகா, ஹேமவாதி, முத்து பாரதி, விக்னேஷ்வேல், குகன், கிருத்திகா, ஷபனா, யுவஸ்ரீ ஆகியோர் பல்வேறு மருத்துவ கல்லுாரியில் சேர்ந்துள்ளனர். பள்ளியில் மாணவர்களுக்கு கல்வியுடன் நீட், ஜே.இ.இ., வகுப்புகள் நடத்தப்படுகிறது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் ஐந்து இடங்களை பிடித்த ஆல்பா பள்ளி மாணவர்களை ஆல்பா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் தனதியாகு சால்வை அணிவித்து, மலர் கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
மேலும்
-
தமிழில் 93 மதிப்பெண் எடுத்த பீஹார் மாணவி; குவிகிறது பாராட்டு!
-
பா.ம.க.,வில் நெருக்கடிக்கு சுமுக தீர்வு வரும்: ஜி.கே.மணி நம்பிக்கை
-
பெண் கொலை: போலீசார் விசாரணை
-
புளோரிடா விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து: விமான நிலையம் மூடல்
-
4 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல்
-
அந்த மனசு தான் சார் கடவுள்; காஷ்மீரில் வீடு வீடாகச் சென்று உதவி செய்யும் ராணுவத்தினர்!