கோல்கட்டாவில் பைனல்: கங்குலி நம்பிக்கை

கோல்கட்டா: ''பிரிமியர் தொடருக்கான பைனல் கோல்கட்டாவில் நடக்கும்,'' என, கங்குலி நம்பிக்கை தெரிவித்தார்.
பிரிமியர் லீக் 18வது சீசனுக்கான தகுதிச் சுற்று-2, பைனல், கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மே 23, 25ல் நடக்க இருந்தன. போர் பதட்டம் காரணமாக பிரிமியர் லீக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால், தகுதிச் சுற்று-2, பைனல் போட்டிகள் வரும் ஜூன் 1, 3ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டன. கோல்கட்டாவில் மழைக்கான வாய்ப்பு இருப்பதால் இவ்விரு போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்படலாம். இதுவரை 'பிளே-ஆப்', பைனல் நடக்கும் இடம் அறிவிக்கப்படவில்லை. சமீபத்தில், கோல்கட்டா ரசிகர்கள் சிலர், பைனல் நடக்கும் இடத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து ஈடன் கார்டன் மைதானத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து முன்னாள் பி.சி.சி.ஐ., தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில், ''இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), பெங்கால் கிரிக்கெட் சங்கம் இடையே நல்ல நட்பு உள்ளது. பைனலுக்கான இடம் குறித்து பி.சி.சி.ஐ.,யிடம் பேசி உள்ளோம். இப்பிரச்னைக்கு போராட்டம் உதவாது. திட்டமிட்டபடி தகுதிச் சுற்று-2, பைனல், ஈடன் கார்டனில் நடக்கும் என்று நம்புகிறேன். இதற்கு தேவையான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது,'' என்றார்.
மேலும்
-
மாநகராட்சி அறிவிப்பை மதிக்காமல் அரசியல் கட்சி பேனர் வைப்பதால் பீதி
-
நிழற்குடையில் விபத்தில் சிக்கிய கார் நிற்க இடமில்லாததால் பயணியர் அவதி
-
வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா கோலாகலம் 'கோவிந்தா' கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
-
திருத்தணி சப்த கன்னியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
-
திடீர் மழையால் கிர்ணி பழம் விளைச்சல் பாதிப்பு மணலி விவசாயிகள் வேதனை
-
பாகிஸ்தானால் மனித குலத்துக்கு அச்சுறுத்தல்: அசாதுதீன் ஓவைசி