வெற்றிகளை குவித்த வெங்கடேஸ்வரா வித்யாலயா

திருப்பூர் : அவிநாசி, சேவூர் - அ.குரும்பபாளையத்தில் உள்ள வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, கடந்த கல்வியாண்டில் (2024-25), பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது.

அறிவியல் பாடப்பிரிவு மாணவர் மோகன்குமார், 600க்கு, 594 மதிப்பெண்களுடன், அவிநாசி வட்டார அளவில் முதலிடமும், பொறியியல் 'கட் ஆப்' பில், 199 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.

இரண்டாமிடம் பெற்ற மாணவர் பிரதீஷ், 592 மதிப்பெண்களுடன், பொறியியல் 'கட்ஆப்'ல் 198 மதிப்பெண்கள் பெற்றார். மூன்றாவது இடம் பெற்ற விஷாந்திகா, 591 மதிப்பெண்களுடன், பொறியியல் 'கட்ஆப்' டில், 197 மதிப்பெண் பெற்றுள்ளார்.

பத்தாம் வகுப்பு தேர்வில், 495 மதிப்பெண்கள் பெற்று, அவிநாசி வட்டார அளவில் மாணவி வர்ஷினி முதலிடம் பிடித்துள்ளார்; மாணவி ரிதன்யா, 494 மதிப்பெண்களுடன் இரண்டாமிடமும், மாணவி லோசிகா,492 மதிப்பெண்களுடன் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதிய, 85 மாணவர்களில், 490க்கு மேல் ஐந்து பேரும், 480 மதிப்பெண்ணுக்கு மேல், 16 பேரும், 450 முதல் 480 மதிப்பெண் வரை, 19 பேரும், 400 முதல், 449 மதிப்பெண் வரை, 21 பேரும் பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். பள்ளியின் தாளாளர் ஜெயந்தி, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களையும், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பாராட்டி, வாழ்த்தினார்.

Advertisement