பொதுத்தேர்வில் கலக்கும் 'சென்சுரி' மெட்ரிக் பள்ளி

திருப்பூர், : திருப்பூர் சென்சுரி பவுண்டேசன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய 103 மாணவர்களில், 46 பேர், 600க்கு, 500க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவி தேவி, 594 மதிப்பெண்களுடன் பள்ளியில் முதலிடம். இவர், வணிகவியல், பொருளியலில் சதம் அடித்துள்ளார்.
ரித்திஹாஸ்ரீ, 590 மதிப்பெண்களுடன் இரண்டாமிடம் பிடித்துள்ளார்; இவர், கணினி அறிவியலில் நுாறு மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவி பிரணிஷா, 589 மதிப்பெண்களுடன் மூன்றாமிடம். இம்மாணவி, கணிதம், கணினி அறிவியல் பாடங்களில் நுாறு மதிப்பெண் பெற்றுள்ளார். கணிதம்- 3, கணினி அறிவியல் - 3, கணினி பயன்பாடு - 9, வணிகவியல் - 1, பொருளியல் - 2, கணக்குப்பதிவியல் - 3 மாணவர்கள் நுாற்றக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், அக் ஷனா, 495 மதிப்பெண்களுடன் பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். இவர், அறிவியல், சமூக அறிவியலில் நுாறு மதிப்பெண் பெற்றுள்ளார். 490 மதிப்பெண்களுடன் இரண்டாமிடம் பிடித்துள்ள அபராஜிதா, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் சென்டம். 485 மதிப்பெண்களுடன் பிரணவ் கிருத்திக் மூன்றாமிடம். அறிவியலில், 2 மற்றும் சமூக அறிவியலில் 3 மாணவியர் நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆங்கில பாடத்தில், ஏழு மாணவர்கள், 99 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பள்ளி தாளாளர் சக்தி தேவி கூறியதாவது: கற்றல் குறைபாடுடைய மாணவர்களுக்கும் எங்கள் பள்ளியில் இடமளித்து அரவணைத்து அன்புகாட்டி கல்வி போதிப்பது, பள்ளியின் சிறப்பும்சம். பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆய்வறிக்கை தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுப் போட்டியில் 5 முறை தேசிய அளவில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளது. எங்கள் பள்ளியில் பயின்ற மாணவர்கள், அண்ணா பல்கலை., ஜெயின் பல்கலை., மற்றும் எஸ்.ஆர்.எம் தொழில்நுட்பக் கல்லூரி போன்ற பல்கலை.,களிலும், பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் சிறந்த அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தமிழ்நாடு வேளாண் கல்லூரி போன்ற புகழ் வாய்ந்த கல்லூரிகளிலும் படிக்கின்றனர். இத்தகைய கல்லூரிகளில் பயில எதிர்கொள்ள வேண்டிய போட்டித் தேர்வுகளுக்கும் வழிகாட்டப்படுகிறது என்பதும் எங்களது சிறப்பம்சமாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
நிழற்குடையில் விபத்தில் சிக்கிய கார் நிற்க இடமில்லாததால் பயணியர் அவதி
-
வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா கோலாகலம் 'கோவிந்தா' கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
-
திருத்தணி சப்த கன்னியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
-
திடீர் மழையால் கிர்ணி பழம் விளைச்சல் பாதிப்பு மணலி விவசாயிகள் வேதனை
-
பாகிஸ்தானால் மனித குலத்துக்கு அச்சுறுத்தல்: அசாதுதீன் ஓவைசி
-
தடுப்பணைகள் சேதம்: விவசாயிகள் வேதனை