காசி விநாயகர் கோவில் 23ம் தேதி கும்பாபிஷேகம்

அவிநாசி : அவிநாசி, காசி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகத்துக்காக திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அவிநாசி, கிழக்கு ரத வீதியில் உள்ள காசி விநாயகர் கோவிலில், கடந்த 36 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. இதனால், கும்பாபிேஷகம் நடத்த ஹிந்து அறநிலையத்துறை முடிவு செய்தது. இதனையடுத்து, கோவிலில், இரண்டு மாதமாக உள் மற்றும் வெளிப்பிரகாரங்களுக்கு தளம் அமைத்தல், கோபுரம் மற்றும் சிற்பங்களுக்கு வர்ணம் தீட்டுதல், ஷெட் அமைத்தல் ஆகிய திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
திருப்பணிகள் முடிவுற்று, வரும், 23ம் தேதி, காலை 6.30 மணிக்கு மேல் 7:31 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக யாகசாலை அமைக்கும் பணிகள் நாளை துவங்கும் என்று கோவில் தக்கார் சபரீஷ்குமார் தெரிவித்தார். கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, கிழக்கு ரத வீதி பேரூராட்சி வணிக வளாக வியாபாரிகள் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
மேலும்
-
முதிய தம்பதி படுகொலை; ஈரோட்டில் மூவர் சிக்கினர்!
-
இந்தியாவை காப்பி அடிக்கும் பாகிஸ்தான்; வெளிநாடுகளுக்கு குழு அனுப்ப ஏற்பாடு
-
தருமபுரம் ஆதினத்தில் குருபூஜை விழா; வெள்ளி நாற்காலி பல்லக்கில் எழுந்தருளினார் ஆதினம்
-
அமெரிக்காவில் கடும் சூறாவளி; 27 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்
-
அமெரிக்காவில் 2 பேர் சுட்டுக்கொலை; உடற்பயிற்சி நிலையத்தில் கொடூர சம்பவம்
-
வால்பாறை மலைப்பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; 40க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்