இந்தியாவை காப்பி அடிக்கும் பாகிஸ்தான்; வெளிநாடுகளுக்கு குழு அனுப்ப ஏற்பாடு

13

இஸ்லாமாபாத்: தங்கள் நாட்டின் நிலைப்பாட்டை உலக நாடுகளிடம் விளக்குவதற்காக, இந்தியாவை போலவே பாகிஸ்தானும் வெளிநாடு செல்லும் குழு அமைத்து உள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது, நம் ராணுவம் கடுமையான தாக்குதலை தொடுத்தது.



தற்போது, ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையை மேற்கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்தும், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு குறித்தும், நம் நிலைப்பாடு என்ன என்பதை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுக்கு நேரில் சென்று விவரிக்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.


பல்வேறு நாடுகளுக்கும் நேரில் சென்று விரிவாக விவரிப்பதற்காக, அனைத்து கட்சி எம்.பி.,க்கள் அடங்கிய ஏழு குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்நிலையில், இந்தியாவை போல் பாகிஸ்தானும் வெளிநாடு செல்லும் குழு அமைத்தது உள்ளது. இது தொடர்பாக, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி கூறியதாவது:


இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே சமீபத்தில் அதிகரித்து வரும் பதட்டங்கள் குறித்தும், சர்வதேச அரங்கில் பாகிஸ்தானின் அமைதிக்கான வாதத்தை முன்வைக்கவும் ஒரு குழுவை வழிநடத்துமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தன்னிடம் கேட்டுக் கொண்டார்.


இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதிலும், இந்த சவாலான காலங்களில் பாகிஸ்தானுக்கு சேவை செய்வதில் நான் பெருமைப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement