வர்த்தக துளிகள்:

கப்பல் கட்டும் கொள்கைக்கு மஹாராஷ்டிரா அரசு ஒப்புதல்



மஹாராஷ்டிராவில் கடல்சார் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதுடன், கப்பல் பழுதுபார்ப்பு மற்றும் மறுசுழற்சி தொடர்பான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் விதமாக, கப்பல் கட்டும் கொள்கைக்கு, அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதனால், புதிய கப்பல் கட்டுமானம், பழைய கப்பல்கள் பராமரிப்பு மற்றும் கைவிடப்பட்ட கப்பல்களை, முறையாக மறுசுழற்சி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும், தனியார் துறை பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால், புதிய வேலைவாய்ப்புகள், சரக்கு கையாளுதல் அதிகரிப்பதுடன், துறைமுக துறையில் முதலீடுகளை ஈர்க்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.பி.ஓ., வருகிறது போரானா வீவ்ஸ்



குஜராத்தின் சூரத்தை தலைமையிடமாக கொண்ட போரானா வீவ்ஸ், 145 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, புதிய பங்கு வெளியீடுக்கு வருகிறது. சாம்பல் துணி தயாரிப்பில் முன்னணி நிறுவனமான திகழும் இந்நிறுவனம், ஐ.பி.ஓ., வாயிலாக முற்றிலும் 67.08 லட்சம் புதிய பங்குகள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் திரட்டப்படும் 71 கோடி ரூபாயில், குஜராத்தில் புதிய ஆலை அமைக்க உள்ளது. பங்குகள் கேட்டு முதலீட்டாளர்கள் வரும் 20 முதல் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மே 27ம் தேதி சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட உள்ளன.

Advertisement