நகராட்சி அலுவலகம் அருகே மின்விளக்கு இல்லாத அவலம்

இடங்கணசாலை: இடங்கணசாலை நகராட்சி அலுவலகத்தில் இருந்து, கே.கே.நகர் செல்லும் சாலையில், 1 கி.மீ.,க்கு, இரு தெரு விளக்குகள் மட்டும் உள்ளன. இச்சாலை வழியே, இளம்பிள்ளை, கே.ஆர்.தோப்பூர் செல்வோர், எந்த நேரமும் பயன்படுத்து கின்றனர்.

ஆனால் இரு விளக்குகள் மட்டும் உள்ளதால், இரவில் அடிக்கடி விபத்து சம்பவங்கள் நடக்கின்றன. குறிப்பாக பள்ளி, கல்லுாரி மாணவியர், வேலைக்கு சென்று வீடு திரும்பும் பெண்கள், இரவில் நடந்து செல்லும் போது பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. வழிப்பறி சம்பவங்களுக்கு வழிவகுக்கும் என்பதால், நகராட்சி அதிகாரிகள், போதிய எண்ணிக்கையில் தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement