பெண்ணின் வீட்டு குளியலறையில் ரகசிய கேமரா: ராணுவவீரர் கைது
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் புதுமனை புகுவிழா அழைப்பின்பேரில் சென்று வீட்டு குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தி இளம்பெண் குளிப்பதை படம் எடுத்து இரண்டு ஆண்டுகளாக பார்த்து வந்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது பெண் அப்பகுதியில் வலை கம்பெனியில் வேலை செய்து வருகிறார். திருமணமாகி கணவன், இரு குழந்தைகள் உள்ளனர்.
வெள்ளிச்சந்தை அருகே ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் மது ராஜா 35. இவர் மிசோரம் மாநிலத்தில் ராணுவ ஸ்டோர் கீப்பராக பணிபுரிந்து வருகிறார். இருவரும் உறவினர்கள். விடுமுறையில் மது ராஜா வரும்போதெல்லாம் அந்த பெண்ணின் வீட்டுக்கு செல்வது வழக்கம். 2003-ல் அந்த பெண் புதிதாக வீடு கட்டி புதுமனை புகுவிழா நடத்தினார்.
இதற்கு அழைத்ததன்பேரில் சென்ற மது ராஜா புதிய வீட்டில் உள்ள குளியல் அறையில் ரகசிய கேமரா ஒன்றை பொருத்தினார். பின் அவர் மிசோரம் மாநிலத்திற்கு பணிக்கு சென்றார்.
அங்கு இருந்தபடி அந்த பெண்ணின் வீட்டு குளியலறையில் இருந்த கேமரா மூலம் அலைபேசியில் அவர் குளிப்பதை பார்த்து வந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் மது ராஜா சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அந்த பெண்ணிடம் அந்த படங்களை காட்டி ஆசைக்கு இணங்குமாறு கூறினார். அதிர்ச்சி அடைந்த பெண் மது ராஜா மீது ஈத்தாமொழி போலீசில் புகார் செய்தார்.
போலீஸ் விசாரணையில் மது ராஜா ரகசியமாக கேமரா பொருத்தியது தெரிந்தது. மது ராஜாவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
முதிய தம்பதி படுகொலை; ஈரோட்டில் மூவர் சிக்கினர்!
-
இந்தியாவை காப்பி அடிக்கும் பாகிஸ்தான்; வெளிநாடுகளுக்கு குழு அனுப்ப ஏற்பாடு
-
தருமபுரம் ஆதினத்தில் குருபூஜை விழா; வெள்ளி நாற்காலி பல்லக்கில் எழுந்தருளினார் ஆதினம்
-
அமெரிக்காவில் கடும் சூறாவளி; 27 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்
-
அமெரிக்காவில் 2 பேர் சுட்டுக்கொலை; உடற்பயிற்சி நிலையத்தில் கொடூர சம்பவம்
-
வால்பாறை மலைப்பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; 40க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்