காந்தி ஆசிரம அலுவலகம் முன் முன்னாள் ஊழியர் ஆர்ப்பாட்டம்



திருச்செங்கோடு: திருச்செங்கோடு அடுத்த புதுப்பாளையம் காந்தி ஆசிரம தலைமை அலுவலகம் முன், முன்னாள் ஊழியர்
முத்துசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், காந்தி ஆசிரம முன்னாள் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்-கொடை தொகை, விடுப்பு கால சம்பளம், ராட்டை நுாற்போர் கூலி, நெய்வோர் கூலி, நுாற்போர் நலநிதி ஆகியவற்றை நீண்ட காலமாக வழங்காமல் இருப்பதை கண்டித்தும், அவற்றை உடன-டியாக வழங்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்-டத்தில், ஒரு பெண் உள்பட, 25க்கும் மேற்பட்டோர் கலந்து-கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின், காந்தி ஆசிரமத்தில், 42 ஆண்டுகள் பணியாற்றிய முன்னாள் ஊழியர் முத்துசாமி, செல்வராஜ் ஆகியோர் கூறியதாவது: திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் துவங்-கப்பட்டு, 101 ஆண்டு நிறைவடைந்துள்ளது. ராட்டை மூலம் நுாலை உற்பத்தி செய்யாமல், போலியாக நுாற்போர்களை வைத்து கணக்கு காட்டி, ஊழல் செய்கின்றனர்.
காந்தி ஆசிரம கடையில் கதர் துணிகளோடு, மில் போர்வை, மில் பெட்ஷீட் ஆகியவற்றை விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும். நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய கூலி மட்டும், 12 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளது. உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement