வட்டார கல்வி அலுவலர் 8 பேர் இடமாற்றம்

சேலம்: தொடக்க கல்வி, வட்டார கல்வி அலுவலர்களுக்கு, பொது மாறுதல் கலந்தாய்வு நேற்று முன்தினம் நடந்தது. சேலத்தில், சேலம் கல்வி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மான்விழி தலைமையில் கலந்தாய்வு நடந்தது. ஒன்றியங்களில், 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றிய, 8 பேர் இடமாற்றப்பட்டனர். ஓமலுார் சுரேஷ் பனமரத்துப்பட்டி; வாழப்பாடி வித்யா ஓமலுார்; அயோத்தியாப்பட்டணம் ஜெயலட்சுமி வாழப்பாடி; அங்கு பணியாற்றிய நெடுமாறன், அயோத்தியாப்பட்டணத்துக்கு மாற்றப்பட்டனர்.


அதேபோல் ஏற்காடு ேஷக்தாவூத் வாழப்பாடி; பனமரத்துப்பட்டி கிரிஜா ஏற்காடு; கெங்கவல்லி ஸ்ரீனிவாஸ் ஆத்துார்; அங்கு பணியாற்றிய அலெக்ஸாண்டர், கெங்கவல்லிக்கு மாற்றப்பட்டனர்.

Advertisement