மாவட்டத்தில் 22ம் தேதி ஜமாபந்தி துவக்கம்
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 10 தாலுகாவிலும் வரும், 22ல் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி துவங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும் வருவாய் துறை தொடர்பான அனைத்து வகை கணக்குகளும் நேர் செய்யப்பட்டு, வரி வசூல், நில அளவீட்டு கருவிகள் உள்ளிட்டவை ஆய்வு செய்து, மாவட்ட அளவிலான அதிகாரிகள் மூலம் ஜமாபந்தி மூலம் நேர் செய்து, ஒப்புதல் வழங்கப்படும். நடப்பாண்டு ஜமாபந்தி வரும், 22ல் மாவட்டத்தில் உள்ள, 10 தாலுகாவிலும் துவங்குகிறது. நம்பியூர் தாலுகாவில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்து, வருவாய் தீர்வாய ஒப்புதல் வழங்க உள்ளார். அங்கு, 22, 23, 27ல் ஜமாபந்தி காலை, 9:00 மணி முதல் நடக்கிறது. அதுபோல தாலுகா வாரியாக சத்தியமங்கலம், 22, 23, 27, 28, 29 தேதிகள்; ஈரோட்டில், 22, 23, 27; அந்தியூரில், 22, 23, 27, 28; கோபி, 22, 23, 27, 28, 29; பவானி, 22, 23, 27; தாளவாடி, 22, 23; பெருந்துறை, 22, 23, 27, 28, 29; மொடக்குறிச்சி, 22, 23, 27; கொடுமுடி தாலுகாவில், 22, 23, 27 நாட்களில் ஜமாபந்தி நடக்க :உள்ளது.
மேலும்
-
முதிய தம்பதி படுகொலை; ஈரோட்டில் மூவர் சிக்கினர்!
-
இந்தியாவை காப்பி அடிக்கும் பாகிஸ்தான்; வெளிநாடுகளுக்கு குழு அனுப்ப ஏற்பாடு
-
தருமபுரம் ஆதினத்தில் குருபூஜை விழா; வெள்ளி நாற்காலி பல்லக்கில் எழுந்தருளினார் ஆதினம்
-
அமெரிக்காவில் கடும் சூறாவளி; 27 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்
-
அமெரிக்காவில் 2 பேர் சுட்டுக்கொலை; உடற்பயிற்சி நிலையத்தில் கொடூர சம்பவம்
-
வால்பாறை மலைப்பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; 40க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்