ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம்

தர்மபுரி: கிருஷ்ணகிரியில், ராயக்கோட்டை ரோட்டிலுள்ள ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் மாரிமுத்து மற்றும் கீர்த்திபிரியன், 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், கோமதி, 495 மதிப்பெண் பெற்று, 2ம் இடமும், கனிஷ்கா, மோனஸ்ரீ, சுஜிதா, யஸ்வந்த், இஷிகா, பார்கவ் ஆகியோர், 494 மதிப்பெண் பெற்று, 3ம் இடமும் பிடித்துள்ளனர்.
தர்மபுரி, பென்னாகரம் ரோட்டிலுள்ள ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், ராகவி, 497 மதிப்பெண் பெற்று முதலிடமும், அனுகீர்த்தனா, 496 மதிப்பெண் பெற்று, 2ம் இடமும், லிஷிதாஸ்ரீ, வித்தியாஸ்ரீ, சாருநிதா, 494 மதிப்பெண் பெற்று, 3ம் இடமும் பிடித்துள்ளனர். கிருஷ்ணகிரி பழையப்பேட்டை ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் முகிலேஷ், 496 மதிப்பெண் பெற்று முதலிடமும், ஷாரியா, கோபிகாஸ்ரீ, மஹதி, 489 மதிப்பெண்கள் பெற்று, 2ம் இடமும், பயோஜா, தர்சனா, சுதிப்குமார், 488 மதிப்பெண் பெற்று, 3ம் இடமும் பிடித்துள்ளனர்.
மாணவர்களுக்கு பாராட்டு விழாவில் ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்விக்குழும தலைவர் இளங்கோவன் தலைமை வகித்து, மாணவர்களை பாராட்டி, கல்வி உதவித்தொகை ஆணையை வழங்கினார். தாளாளர் மீனா இளங்கோவன், இயக்குனர்கள் பிரேம், சினேகா பிரவின், தலைமை செயல்பாட்டு அலுவலர் சந்திரபானு, மூத்த முதல்வர், முனைவர் பிரெடரிக் சாம், பள்ளிகளின் முதல்வர்கள் பத்மா, சிவகாமசுந்தரி, ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement