நீர்நிலைகளில் கண்காணிப்பு தேவை
கரூர்: கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி, கடவூர், தரகம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கல் குவாரிகள் செயல்படுகின்றன. இதை தவிர பல்-வேறு கிராம பஞ்சாயத்துகளில், கற்களை வெட்டி எடுக்க தனியா-ருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இத்தகைய கல்குவாரிகளில் பல இடங்களில் பெரிய பள்ளங்கள் உள்ளது. கோடை வெயில் காரணமாக ஆறு, ஏரி, குளங்களில் தண்ணீர் இல்லை. காவிரி, அமராவதி ஆற்றில், சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இங்கு, மணல் அதிகளவில் அள்ளப்பட்டு இருப்பதால் ஆற்றில் பல இடங்களில் புதை குழிகள் உள்ளன.
தற்போது பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்-பட்டுள்ளதால் மாணவ, மாணவியர் ஆறு, ஏரி, குளம், குவாரி பள்ளத்தில் தேங்கிய தண்ணீர், குட்டைகளில் குளிக்ககோ, மீன் பிடிக்க ஆர்வத்துடன் செல்வது வழக்கம். கடந்த, 20 நாட்களுக்கு முன், பெரிய ஆண்டாங்கோவில் அமராவதி ஆற்றில் குளிக்க சென்ற, இரண்டு சிறுவர்கள் மூழ்கி இறந்தனர். இதுபோன்ற உயி-ரிழப்பை தடுக்கும் வகையில், மாவட்டத்தில் உள்ள நீர் நிலை-களில் போதிய பாதுகாப்பு ஏற்பாட்டை செய்ய, மாவட்ட நிர்-வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.
மேலும்
-
முதிய தம்பதி படுகொலை; ஈரோட்டில் மூவர் சிக்கினர்!
-
இந்தியாவை காப்பி அடிக்கும் பாகிஸ்தான்; வெளிநாடுகளுக்கு குழு அனுப்ப ஏற்பாடு
-
தருமபுரம் ஆதினத்தில் குருபூஜை விழா; வெள்ளி நாற்காலி பல்லக்கில் எழுந்தருளினார் ஆதினம்
-
அமெரிக்காவில் கடும் சூறாவளி; 27 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்
-
அமெரிக்காவில் 2 பேர் சுட்டுக்கொலை; உடற்பயிற்சி நிலையத்தில் கொடூர சம்பவம்
-
வால்பாறை மலைப்பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; 40க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்