கரூரில் தரமான சாலை அமைக்க போக்குவரத்து செறிவு கணக்கெடுக்கும் பணி

கரூர்: வரும் காலத்தில், சாலை அமைக்கும் பணிகளை விரிவுப்படுத்த, கரூரில் போக்குவரத்து செறிவு கணக்கெடுக்கும் பணி நடந்து வரு-கிறது.

தமிழகத்தில், நெடுஞ்சாலை துறை சார்பில், மூன்று ஆண்டுக-ளுக்கு ஒருமுறை, போக்குவரத்து செறிவு கணக்கெடுக்கும் பணி நடப்பது வழக்கம். அதில், மாநில நெடுஞ்சாலைகள், போக்கு
வரத்து அதிகம் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் மாவட்ட சாலைகளில் செல்லும் வாகனங்கள் கணக்கெடுக்கப்படும். கரூர் மாவட்டத்தில், பல சாலைகளில் போக்கு

வரத்து செறிவு கணக்கெடுக்கும் பணி கடந்த, 12ல் தொடங்கியது. இன்றுடன் நிறைவு பெறுகிறது. அதில், 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு, அந்தந்த ஊர்களில் அடிப்படை வசதி-களை பெருக்குவது போல, சாலைகளில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கையை வைத்து, தரமான சாலை அமைக்கவே, போக்கு-வரத்து செறிவு கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. சாலைகளில் பஸ், லாரி, கனரக வாகனங்கள், டூவீலர்கள் எவ்வளவு செல்கிறது என கணக்கெடுக்கப்படுகிறது. அந்த எண்ணிக்கை விபரங்கள், மாநில நெடுஞ்சாலை துறைக்கு அளிக்கப்படும். அதன் பிறகு, வாகனங்களின் எண்ணிக்கையை வைத்து, வரும் காலங்களில் தர-மான,
அகலமான சாலைகள் அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement