ரேஷன் கடை கட்டித்தர மக்கள் வலியுறுத்தல்

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில், நான்கு ரேஷன் கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடையிலும், 300-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கி செல்கின்றனர். அரவக்குறிச்சி பேரூராட்சிக்-குட்பட்ட கொத்தப்பாளையம் ஐந்து கி.மீ., துாரமும், கரடிபட்டி இரண்டு கி.மீ., துாரமும் உள்ள நிலையில், அரவக்குறிச்சிக்கு வந்து ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி செல்கின்றனர். வயதானவர்கள், பெண்கள் ரேஷன் கடைக்கு வந்து, பொருட்-களை வாங்கி செல்வதற்குள், அசதி ஏற்பட்டு விடுகிறது.


எனவே அப்பகுதி மக்களின் நலன் கருதி, கரடிப்பட்டி, கொத்தப்பாளை-யத்திற்கு ஒருங்கிணைந்த ரேஷன் கடை கட்டித்தர வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement