அமைதிப்பேச்சு தோல்வி; உக்ரைன் மீது மிகப்பெரிய டிரோன் தாக்குதலை நடத்தியது ரஷ்யா!

கிவ்: போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரிய டிரோன் தாக்குதலை நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட நிலையில், இருநாடுகளுக்கு இடையேயான இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், தாக்குதல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
இதனிடையே, கடந்த 15ம் தேதி துருக்கியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நிறுத்தத்திற்கான நேரடி பேச்சுவார்த்தையில் முதல்முறையாக ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேரம் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில், இருநாட்டு கைதிகளை பரிமாறி கொள்வதில் மட்டுமே உடன்பாடு எட்டப்பட்டது.
போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பிறகு, போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப், இருநாட்டு தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளையில், உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதலை தொடர்ந்துள்ளது. நேற்று சுமி மாகாணத்தில் பஸ் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், உக்ரைனின் முக்கிய பகுதிகள் மீது ரஷ்யா மிகப்பெரிய டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. மத்திய கிவ், டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் ஆகிய பகுதிகளில் 273 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் விமானப் படை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், 4 வயது குழந்தை உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
உக்ரைனுடனான போர் தொடங்கியது முதல் மிகப்பெரிய டிரோன் தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. போரின் 3வது ஆண்டான கடந்த பிப்.,23ம் தேதி, உக்ரைன் மீது 267 டிரோன்களில் ரஷ்யா தாக்குதல் நடத்தியதே அதிகபட்சமாக இருந்தது. தற்போது, அதை விட கூடுதலான டிரோன்களில் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து உக்ரைன் ராணுவம் கூறுகையில்,"உக்ரைனின் கிழக்கு பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு ராணுவம் தக்க பதிலடியை கொடுத்து ள்ளது. 88 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது. எஞ்சிய டிரோன்கள் திரும்ப சென்று விட்டன," என தெரிவித்துள்ளது.
மேலும்
-
நெறிமுறைகளை நீதிபதிகள் மீறியிருந்தால்...: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பேச்சு
-
முல்லை பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு கூடுதல் மனு
-
பத்தாம் வகுப்பில் ரோபோட்டிக்ஸ் பாடம்: கேரளாவில் கட்டாயம்!
-
மருமகனுக்கு மன்னிப்பு; மீண்டும் கட்சி பொறுப்பு வழங்கினார் மாயாவதி
-
11 புதிய நிபந்தனைகள் விதிப்பு; பாகிஸ்தான் தலையில் இடியை இறக்கிய ஐ.எம்.எப்.,!
-
மழையால் ரத்தான போட்டி டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்; பெங்களூரு அணி அறிவிப்பு