மாற்றுத்திறனாளி நலவாரிய உறுப்பினருக்கு விண்ணப்பிக்கலாம்
கரூர்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில், அலுவல் சாரா உறுப்பின-ருக்கு வரும், 23க்குள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்-கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழக அரசின், மாற்றுத்
திறனாளிகள் நல வாரியத்தில், அலுவல் சாரா உறுப்பினர்கள் மூன்-றாண்டு
களுக்கு ஒருமுறை நியமிக்கப்படுவர். புதிய உறுப்பினர்கள் நிய-மனம் செய்யப்பட வேண்டியுள்ளதால் பார்வையற்றோர்,
செவித்-திறன் பாதிக்கப்பட்டோர், தசைசிதைவு நோயினால் பாதிக்கப்-பட்டோர், தவழும் மாற்றுத்திறனாளிகள், உயரம் குறைந்த மாற்றுத்திறனுடையோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர், கை, கால் இயக்க குறைபாடுடையோருக்கான மாற்றுத்திறனாளிகள், அவர்களுக்கு சேவை புரியும் தொண்டு நிறுவனத்தை சார்ந்த பிரதிநிதிகள், இந்த வாரி-யத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலு-வலர் வழியாக, சென்னை
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்கு அனுப்ப வேண்டும். கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வரும், 23க்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் விபரம் பெற, 04324- 257130 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.