தெலுங்கானாவில் நக்சலைட்டுகள் 20 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் மீட்பு

ஹைதராபாத்: தெலுங்கானாவில் நக்சலைட்டுகள் 20 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வெடி மருந்துகள், ஆயுதங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர்-தெலுங்கானா எல்லையில், நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன்படி, தெலுங்கானா மாநிலம், முலுகு மாவட்டத்தில் வாகன சோதனைகள் மற்றும் ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது நக்சலைட்டுகள் 20 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வெடி மருந்துகள் மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் நக்சலைட்டுகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர்-தெலுங்கானா எல்லையில் மாவோயிஸ்ட் கோட்டைகளை அகற்றுவதற்காக, 21 நாட்கள் ஒருங்கிணைந்த முயற்சியாக நடத்தப்பட்ட ''ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட்'' வெற்றிக்குப் பிறகு இந்தக் கைதுகள் நடந்துள்ளன.
வாசகர் கருத்து (2)
Thiru, Coimbatore - Coimbatore,இந்தியா
18 மே,2025 - 08:49 Report Abuse

0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
18 மே,2025 - 07:53 Report Abuse

0
0
Reply
மேலும்
-
முதிய தம்பதி படுகொலை; ஈரோட்டில் மூவர் சிக்கினர்!
-
இந்தியாவை காப்பி அடிக்கும் பாகிஸ்தான்; வெளிநாடுகளுக்கு குழு அனுப்ப ஏற்பாடு
-
தருமபுரம் ஆதினத்தில் குருபூஜை விழா; வெள்ளி நாற்காலி பல்லக்கில் எழுந்தருளினார் ஆதினம்
-
அமெரிக்காவில் கடும் சூறாவளி; 27 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்
-
அமெரிக்காவில் 2 பேர் சுட்டுக்கொலை; உடற்பயிற்சி நிலையத்தில் கொடூர சம்பவம்
-
வால்பாறை மலைப்பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; 40க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
Advertisement
Advertisement