பா.ஜ., தலைவருடன் சந்திப்பு; போலீஸ் ஏட்டு இருவர் மாற்றம்!

1

திருப்பூர்: யூனிபார்மில் சென்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்த போலீஸ் ஏட்டு இருவர் ஆயுத படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.


திருப்பூரில் பா.ஜ., சார்பில் தேசிய கொடி பேரணி இரு நாட்களுக்கு முன் நடந்தது. இதில் பங்கேற்க பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருப்பூர் வந்திருந்தார்.



அப்போது, அவரை ஹோட்டலில் யூனிபார்மில் சென்று அனுப்பர்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் சேர்ந்த போலீஸ் ஏட்டு மந்திரம், 42, மற்றும் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் சேர்ந்த போலீஸ் ஏட்டு சின்னசாமி, 40 ஆகியோர் நேரில் சென்று சந்தித்தனர்.


போலீஸ் ஏட்டு இருவரையும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இடமாற்றம் செய்யப்பட்ட இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement