தமிழகத்தில் இன்று 12, நாளை 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சென்னை: தமிழகத்தில் இன்று (மே 18) 8 மாவட்டங்களிலும், நாளை (மே 19) 8 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 12 மாவட்டங்களில் இன்று (மே 18) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (மே 19)
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 8 மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் (மே 20)
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கரூர், நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கோவை, நீலகிரியில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழக கடலோரப்பகுதிகள், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் மே 22ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
மழையால் ரத்தான போட்டி டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்; பெங்களூரு அணி அறிவிப்பு
-
நீதி நிலைநாட்டப்பட்டது: ஆபரேஷன் சிந்தூர் குறித்து புது வீடியோ வெளியிட்டது இந்திய ராணுவம்
-
பிரீமியர் லீக் போட்டி: பஞ்சாப் அணி பேட்டிங்
-
அவமானப்படுத்த காங்கிரஸ் முயற்சியா: சசிதரூர் சொல்வது இதுதான்!
-
துருக்கிக்கு ஒரு நெருக்கடி: பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்த மும்பை ஐ.ஐ.டி.
-
அரசியலமைப்பை காக்க முன் வாருங்கள்; 8 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு