அரசியலமைப்பை காக்க முன் வாருங்கள்; 8 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு

36


சென்னை: ''அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையை காக்க முன் வர வேண்டும்'' என 8 மாநில முதல்வர்களுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.


சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாவுக்கு ஒப்புதல் கொடுப்பதற்கு கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயித்து, சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. 'இது, தங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த மாநிலங்களுக்கும் கிடைத்த வெற்றி' என்று தமிழக முதல்வர் கூறியிருந்தார்.

இந்நிலையில், தீர்ப்பு தொடர்பான 14 கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றத்தை ஜனாதிபதி கேட்டுள்ளார். இது தொடர்பாக, மேற்குவங்கம், கர்நாடகா, ஹிமாச்சல பிரதேசம், கேரளா, தெலுங்கானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் ஆகிய 8 மாநில முதல்வருக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:




* ஜனாதிபதி உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பி உள்ள குறிப்பினை எதிர்க்க வேண்டும்.


* ஒருங்கிணைந்த சட்ட நடவடிக்கை மூலம் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையை காக்க முன் வர வேண்டும்.


* கவர்னர் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த முடியாது.

* கவர்னருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேள்விக் குறியாக்குவது ஜனாதிபதி குறிப்பின் நோக்கம்.



* கவர்னருக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பெற்றுள்ள தீர்ப்பு அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.


* மாநில அரசுக்கு எதிரான பிடிவாத போக்கினை கவர்னர்கள் கடைபிடித்தால் இந்த தீர்ப்பு உதவும்.


* இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு, மாநில சுயாட்சியை பாதுகாக்க முன்வர வேண்டும்


* அரசியலமைப்பை பாதுகாக்க அறைகூவல் விடுக்கிறேன்


* உச்ச நீதிமன்ற தீர்ப்பை சீர்குலைக்க பா.ஜ., முயற்சி செய்து வருகிறது. பா.ஜ.,வின் தீய நோக்கத்தை காட்டுகிறது.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement