ஆபரேஷன் சிந்தூர் பற்றி சர்ச்சைப் பதிவு; அசோகா பல்கலை பேராசிரியர் கைது

10


சண்டிகர்: ஆபரேசன் சிந்தூர் குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறியதாக அசோகா பல்கலை பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.


ஹரியானாவில் உள்ள அசோகா பல்கலையின் உதவி பேராசிரியரும், அரசியல் அறிவியல் துறையின் தலைவராக இருப்பவர் அலி கான் மக்முதாபாத். அண்மையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் குறித்து சமூகவலைதளத்தில் விடுத்த பதிவு பெரும் சர்ச்சையானது.


இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஹரியானா போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஹரியானா மகளிர் ஆணையமும் மே 15ம் தேதிக்குள் ஆஜராக, அலிகான் மக்முதாபாத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர் ஆஜராகாவில்லை. இந்த சூழலில் அவர் கைதாகியுள்ளார்.


இது குறித்து மகளிர் ஆணைய தலைவர் ரேணு பாட்டியா கூறுகையில், "நாட்டின் மகள்களான கலோனல் ஷோபியா குரேஷி மற்றும் விங் கமென்டர் வியோமிகா சிங் ஆகியோருக்கு சல்யூட். ஆனால், அரசியல் அறிவியல் பாடத்தை கற்பிக்கும் ஒரு பேராசிரியர், இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்த, அவர்களை பேசியிருக்கக் கூடாது. குறைந்தபட்சம் இன்று அவர் கமிஷன் முன் ஆஜராகி வருத்தம் தெரிவிப்பார் என்று நான் எதிர்பார்த்தேன், எனக் கூறினார்.

Advertisement