முல்லை பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு கூடுதல் மனு

புதுடில்லி: மழைக்காலத்திற்கு முன்பே முல்லை பெரியாறில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.



கேரளா, தமிழகம் இடையேயான முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மே 6ம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, அணை பாதுகாப்பாக இல்லை என்ற கேரள அரசின் குற்றச்சாட்டை நிராகரித்த நீதிமன்றம், அணை பராமரிப்பு பணியை கண்காணிக்க மேற்பார்வை குழு அமைக்க உத்தரவிட்டு இருந்தது.


பராமரிப்புக் குழு அளித்த பரிந்துரைகளை 2 வாரங்களில் அமல்படுத்த வேண்டும் என்று கூறி அடுத்தக்கட்ட விசாரணை மே 19ம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தது. நாளைய தினம் வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், மழைக்காலம் முன்பே முல்லை பெரியாறில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.


மனுவில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில், தமிழக பணியாளர்கள் சென்று வர அனுமதிப்பது, படகுகள் செல்வது, மரங்களை வெட்ட அனுமதி, சாலை அமைக்க கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Advertisement