பத்தாம் வகுப்பில் ரோபோட்டிக்ஸ் பாடம்: கேரளாவில் கட்டாயம்!

4

திருவனந்தபுரம்: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ் கல்வியை கட்டாயமாக்கிய முதல் மாநிலமாக கேரளா மாறியுள்ளது.

ரோபோட்டிக்ஸ் கல்வி என்பது, மாணவர்களுக்கு ரோபோக்களைப் பற்றிய அறிவை அளிக்கும் ஒரு கல்வி முறையாகும். இது, ரோபோக்களை வடிவமைத்தல், கட்டுப்படுத்துதல், பராமரித்தல் மற்றும் அவற்றுக்கான பயன்பாடுகளை உருவாக்குதல் போன்றவற்றை உள்ளடக்கியது.
இந்த ரோபோட்டிக்ஸ் குறித்து அறிந்து கொள்ள வசதியாக, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய பாடமாக, கே.ஐ.டி.இ., எனப்படும் கேரள அரசின் பொதுக் கல்வித்துறையின் தொழில் நுட்பபிரிவு செயல்படுத்துகிறது.

இது குறித்து கே.ஐ.டி.இ., தலைமை நிர்வாக அதிகாரியும் ஐ.சி.டி., பாடப்புத்தகக் குழுவின் தலைவருமான அன்வர் சதாத் அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பத்தாம் வகுப்பு ஐ.சி.டி பாடப்புத்தகத்தில் முதல் தொகுதியில் உள்ள "தி வேர்ல்ட் ஆப் ரோபோட்ஸ்" என்ற ஆறாவது அத்தியாயம், ரோபோட்டிக்ஸை ஒருங்கிணைப்பது, அடிப்படை ரோபோட்டிக்ஸ் ஆகியவை குறித்து மாணவர்கள் படித்து பயன் பெறலாம்.

இந்த பாடத்தில்,சுற்று கட்டுமானம், சென்சார்கள் மற்றும் ஆக்சுவேட்டர்களைப் பயன்படுத்துதல் மற்றும் கணினி நிரலாக்கத்தைப் பயன்படுத்தி மின்னணு சாதனங்களைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.

இது ஒரு முன்னோடி முயற்சியாக, ஜூன் 2 ஆம் தேதி தொடங்கும். 10ம் வகுப்பு படிக்கும் 4.3 லட்சம் மாணவர்களுக்கும் ரோபோட்டிக்ஸ் கல்வியை கட்டாயமாக்கிய நாட்டின் முதல் மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளது.

இவ்வாறு அன்வர் சதாத் அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement