நேஹல் வதேரா, ஷஷாங் சிங் அரைசதம்: பஞ்சாப் அணி வெற்றி

மும்பை: பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி, 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 59-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியும், பஞ்சாப் அணியும் மோதின.
ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் அணி, ஷ்ரேயஸ் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பேட்டிங் தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ப்ரியான்ஸ் ஆர்யாவும், பிரப்சிம்ரன் சிங்கும் களமிறங்கினர். இதில் ப்ரியான்ஸ் ஆர்யா 9 ரன்களுக்கு தேஷ்பாண்டே பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து பிரப்சிம்ரன் சிங் 21 ரன்கள் எடுத்திருந்தபோது தேஷ் பாண்டே பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்து வந்த மிட்செல் ஓவன் மபாகா பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.
நேஹல் வதேரா, ஷஷாங் சிங் அரைசதம்:
அடுத்து வந்த நேஹல் வதேராவும் ஸ்ரேயஸூம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
சிறப்பாக ஆடிய நேஹல் வதேரா, 37 பந்துகளை எதிர்கொண்டு 70 ரன்கள் சேர்த்து மட்வால் பந்தில் அவுட் ஆனார். அவர் 5 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் விளாசினார்.
ஷ்ரேயஸ் 5 பவுண்டரிகள் உள்பட 30 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் ஷாஷாங் அதிரடியா விளையாடி 30 பந்துகளில் 59 ரன்களும் ஒமர்ஷாய் 21 ரன்களும் சேர்க்க, பஞ்சாப் அணி, 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது.
ராஜஸ்தான் அணியின் தேஷ்பாண்டே, 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து ராஜஸ்தான் அணிக்கு 220 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
220 ரன்கள் வெற்றி இலக்காகக்கொண்டு அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர்.
ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி, 25 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ப்ரார் பந்தில் அவுட் ஆனார்.
அடுத்து சூர்யவன்ஷி 15 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்து ப்ரார் பந்தில் ஆட்டமிழந்தார்.
கேப்டன் சஞ்சு சாம்சன் 20 ரன்களில் ஒமர்சாய் பந்தில் வெளியேறினார்.
ரியான் ப்ராக் 13 ரன்களில் ஹர்பிரீத் ப்ரார் பந்தில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த ஜூரல் மட்டும் அதிரடியாக அரைசதம் கடந்து 53 ரன்களில் அவுட் ஆனார். மற்றவர்கள் சோபிக்கவில்லை.
இறுதியில் ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்நிலையில் பஞ்சாப் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணி சார்பில் ப்ரார் 3 விக்கெட்டுகளையும், ஒமர்ஷாய் மற்றும் ஜன்சன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மேலும்
-
பிரீமியர் லீக் போட்டி: டில்லி அணி பேட்டிங்
-
இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான லஷ்கர் பயங்கரவாதி பாக்.,கில் சுட்டுக்கொலை
-
காஷ்மீரில் பாக். ஏவி வெடிக்காத 42 வெடிகுண்டுகள்: ராணுவம் பாதுகாப்பாக அழிப்பு
-
நகைக்காக சினிமா பாணியில் ஒரு கொலை; மாமியாரை கொன்ற மருமகள் கைது
-
பீஹாரில் நிதீஷ்குமார் கிராமத்திற்கு செல்ல முயன்ற பிரசாந்த் கிஷோர் தடுத்து நிறுத்தம்
-
பிரிட்டனில் மேயர் பதவிக்கு தேர்வான உ.பி., பொறியாளர்!