கொலை முயற்சி வழக்கு: வங்கதேச நடிகை நுஸ்ரத் பரியா கைது

டாக்கா: கொலை முயற்சி வழக்கில், வங்கதேச நடிகை நுஸ்ரத் பரியா இன்று கைது செய்யப்பட்டார்.
வங்கதேச நடிகை நுஸ்ரத் பரியா 31, வங்கதேச முன்னாள் அதிபரும், ஷேக் ஹசீனாவின் தந்தையுமான முஜிபுர் ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்று படமான 'முஜிப்- தி மேக்கிங் ஆப் எ நேஷன்' என்ற படத்தில் நடித்தவர். பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவின் கேரக்டரில் நடித்தவர் இந்த நுஸ்ரத் பரியா.
இவர், இன்று காலை தாய்லாந்து செல்வதற்காக, புறப்பட்டபோது டாக்கா விமான நிலையத்தின் குடியேற்ற சோதனை சாவடியில் கைது செய்யப்பட்டார்.
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் போராட்டம் வெடித்தபோது நடந்த சம்பவம் தொடர்பாக, இவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர் ஷேக் ஹசீனாவுக்கு ஆதரவானவர் என்ற அடிப்படையில் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.
பத்தா மண்டலத்தின் உதவி காவல் ஆணையர் ஷபிகுல் இஸ்லாம் கூறியதாவது:
கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நுஸ்ரத் பரியா, இன்று கைது செய்யப்பட்ட பின், டாக்காவில் உள்ள வதாரா காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.
இவ்வாறு ஷபிகுல் இஸ்லாம் கூறினார்.
மேலும்
-
சர்வதேச சிலம்ப போட்டியில் சென்னை மாணவர்கள் அசத்தல்
-
இஸ்ரோவின் 'பி.எஸ்.எல்.வி., - சி 61 ராக்கெட்' 3வது நிலையில் ஏற்பட்ட கோளாறால் தோல்வி
-
எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி மாநில கைப்பந்தில் 'சாம்பியன்'
-
டாக்டர்களுக்கு சம்பளம் குறைவு உலக சுகாதார அமைப்பிடம் புகார்
-
இன்று இனிதாக... (19.05.2025) சென்னை
-
அமைச்சர், எம்.எல்.ஏ.,வை உருவாக்கிய அரசு பள்ளியின் தேர்ச்சி சதவீதம் பரிதாபம்