வாடிகனில் கோலாகலம்: பதவி ஏற்றார் போப் 14ம் லியோ

வாடிகன் நகரம்: வாடிகன் நகரில் லட்சக்கணக்கானோர் முன்னிலையில், புதிய போப் ஆக ராபர்ட் பிரெவோஸ்ட் பதவி ஏற்றுக் கொண்டார்.


@1brகத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ்(88), அண்மையில் காலமானார். அதன் பின்னர் புதிய போப் ஆக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரெவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டார்.


இதன்மூலம் அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் போப் என்ற பெருமையை அவர் பெற்றார். இந் நிலையில், வாடிகன் நகரில் லட்சக்கணக்கானோர் முன்னிலையில் புதிய போப் ஆக ராபர்ட் பிரெவோஸ்ட் பதவி ஏற்றுக் கொண்டார்.


அவரின் அதிகாரத்தை குறிக்கும் வகையில் மீனவ மோதிரம் அணிவிக்கப்பட்டது. பதவியேற்பு விழாவில் காசா, உக்ரைன் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தார்.


விழாவில், அமெரிக்க துணை அதிபர் வான்ஸ், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பில் ராஜ்யசபா துணை தலைவர் ஹரிவன்ஷ் நாராயணன் சிங் கலந்து கொண்டு, இந்திய மக்களின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

Advertisement