செங்கல்பட்டு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கன மழை

செங்கல்பட்டு:தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, கன மழை கொட்டித் தீர்த்தது.
செங்கல்பட்டு மட்டுமின்றி, செங்கல்பட்டு புறநகர் பகுதிகளான மகேந்திரா சிட்டி, சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், பாலுார், வில்லியம்பாக்கம் கருநிலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும், பலத்த இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.
இதன் காரணமாக, வில்லியம்பாக்கம், கருநிலம், கலிவந்தபட்டு பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்த நெல் மூட்டைகள் மற்றும் குவியல்கள் நனைந்து வீணாகின.
இதனால் விவசாயிகள் கவலையடைந்து, நெல்லை உலர்ந்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப் பகுதியில், நேற்று மாலை 3:30 மணி வரையில் வெயில் கொளுத்தியது.
3:30 மணியளவில், திடீரென கருமேகங்கள் சூழ்ந்து, 3:50 மணிக்கு மழை பெய்தது.
அரை மணி நேரம் பெய்த இந்த திடீர் மழையால், அனல் காற்று காணாமல் போய், குளிர் காற்று வீசத் துவங்கியது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும்
-
இலவச பயணத்திற்கு மறுப்பு; முன்னாள் எம்.எல்.ஏ., வாக்குவாதம்; 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட கண்டக்டர்
-
அமைச்சருக்கு 'கோ பேக்' சொன்ன தர்மபுரி தி.மு.க., நிர்வாகிகள் நீக்கம்
-
8 மாவட்டங்களில் இன்று கனமழை
-
மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது
-
வள்ளலார் மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி
-
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.4.10 லட்சம் மோசடி