பாம்ப்ரி ஜோடி 2வது இடம்

போர்டியாக்ஸ்: ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் இரட்டையரில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி 2வது இடம் பிடித்தது.
பிரான்சில், ஆண்களுக்கான ஏ.டி.பி., சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடி, போர்ச்சுகலின் பிரான்சிஸ்கோ கேப்ரால், ஆஸ்திரியாவின் லுகாஸ் மிட்லர் ஜோடியை எதிர்கொண்டது.
'டை பிரேக்கர்' வரை நீடித்த முதல் செட்டை 6-7 என இழந்த இந்தியா-அமெரிக்க ஜோடி, மீண்டும் 'டை பிரேக்கர்' வரை சென்ற 2வது செட்டையும் 6-7 என கோட்டைவிட்டது. முடிவில் பாம்ப்ரி, காலோவே ஜோடி 6-7, 6-7 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்த 2வது இடத்தை கைப்பற்றியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement