பள்ளம்பாக்கம் சாலை சேதம் வாகன ஓட்டிகள் தவிப்பு

சூணாம்பேடு:பள்ளம்பாக்க சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து, கடுமையாக சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர்.
சூணாம்பேடு அருகே கொளத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளம்பாக்கம் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள பள்ளம்பாக்கம் - கொளத்துார் சாலையை தேன்பாக்கம், வெண்ணாங்குப்பட்டு, கொளத்துார் ஆகிய கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலை, கடந்த 15 ஆண்டுகளாக ஜல்லிகள் பெயர்ந்து, ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு, கடுமையாக சேதமடைந்து உள்ளது.
இதனால், இரவு நேரத்தில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிறு சிறு விபத்துகளில் சிக்குகின்றனர்.
ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement