இலவச கண் பரிசோதனை நெல்லிக்குப்பத்தில் முகாம்

திருப்போரூர்:நெல்லிக்குப்பத்தில் நேற்று, இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

ஆலந்தார் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை, சென்னை கிரவுன் அரிமா சங்கம், அன்னை வேண்டவராசி சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் நெல்லிக்குப்பம் ஊராட்சி சார்பில், நெல்லிக்குப்பம் அன்னை வேண்டவராசி திருமண மண்டபத்தில், இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று நடந்தது.

முகாமை, ஊராட்சி தலைவர் பார்த்தசாரதி துவக்கி வைத்தார்.

காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடந்த முகாமில், மருத்துவக் குழுவினர் பங்கேற்று, 70 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர்.

அதில், 30 பேருக்கு கண்புரை இருப்பது கண்டறியப்பட்டு, இலவச அறுவை சிகிச்சைக்காக சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும், அறுவை சிகிச்சை முடிந்து அவர்களை அழைத்து வந்து, நெல்லிக்குப்பத்தில் விடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement