பாதுகாப்பில்லாத கிணறுகளை ஆய்வு செய்ய உத்தரவு

சென்னை: துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே, நேற்று முன்தினம் எட்டு பேருடன் சென்ற கார், தடுமாறி சாலை அருகில் இருந்த கிணற்றில் விழுந்தது. இதில், ஐந்து பேர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.

'இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுதும் உள்ள சாலைகளின் தரம் குறித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலைகள் தரமாக இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'அதேபோல, சாலையோரம் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்களை ஆய்வு செய்து, பாதுகாப்பு இல்லாத கிணறு மற்றும் பள்ளங்களை சுற்றி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமை செயலர் முருகானந்தம் அறிவுறுத்தி உள்ளார்.

Advertisement