ரூ.100 தர மறுத்த பாட்டியை கல்லை போட்டு கொன்ற பேரன்

கொப்பால்: கர்நாடக மாநிலம், கொப்பால் மாவட்டம், கனககிரியைச் சேர்ந்தவர் சேத்தன் குமார், 34. இவருக்கு திருமணம் ஆகவில்லை. வேலைக்கு செல்லாமல், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவும் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார்.

மீண்டும் மது குடிக்க பெற்றோரிடம் பணம் கேட்டார்; அவர்கள் கொடுக்க மறுத்தனர். இதனால், தன் பாட்டியான கனகம்மா, 82, என்பவரிடம் சென்று, 'பாட்டி எனக்கு 100 ரூபாய் கொடுங்கள்; திருப்பித் தந்து விடுகிறேன்' என்று கேட்டுள்ளார். 'நீ வேலைக்கு செல்லவில்லை; எப்படி பணம் தருவாய்?' என்று கனகம்மா கேட்டதுடன், 'பணம் தர மாட்டேன்' என்றும் கூறி உள்ளார்.

கோபம் அடைந்த சேத்தன் குமார், மாவு அரைக்கும் குழவி கல்லை எடுத்து, கனகம்மா தலையில் போட்டுவிட்டு தப்பினார். கனகம்மா அதே இடத்தில் இறந்தார். தப்பி ஓடிய சேத்தன் குமாரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement