நீதிபதி வீட்டில் எரிந்த பணம் விவகாரத்தில் எப்.ஐ.ஆர்., போடாதது ஏன்? தன்கர் கேள்வி

புதுடில்லி: நீதிபதிவீட்டில் எரிந்த நிலையில் கட்டு கட்டாக பணம் மீட்ட வழக்கில் இன்று வரை எப்.ஐ.ஆர்., போடாதது ஏன் என துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் இல்லத்தில் கடந்த மார்ச் மாதம் இரவு லேசான தீ விபத்து சம்பவம் ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் மீட்புபணியில் ஈடுபட்ட போது எரிந்த நிலையில் கட்டு கட்டாக பணம் சிக்கியது நாடு முழுதும் பரபரப்பைஏற்படுத்தியது. இது குறித்து விசாரிக்க மூன்று நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் கூறியது, லுட்யன்ஸ் நகரில் உள்ள ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் எரிந்த பணம் கண்டெடுக்கப்பட்டது. இன்று வரை எப்.ஐ.ஆர். இல்லை... இது முடிவுக்கு வருமா காலப்போக்கில் மங்கிவிடுமா என நாட்டு மக்கள் அனைவரும் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்,
குற்றவியல் நீதி அமைப்பு ஒவ்வொரு தனிநபருக்கும் செயல்படுவது போல் செயல்படுத்தப்படவில்லை?... இது நீதித்துறை அமைப்பை மாசுபடுத்தியதா? இந்த விவகாரத்தில் பெரிய சுறாக்கள் யார்? என நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
ஏற்கனவே இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. விசாரணை என்பது தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.இப்போது ஒரு முடிவை எடுக்க வேண்டிய நேரம் இது. சஞ்சீவ் கண்ணவால் பாதியளவு நம்பிக்கை மீட்கப்பட்டது. விசாரணையில் அக்கறை கொண்டவர்கள் விரைவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில் இருதய அறுவை சிகிச்சை பயிற்சி
-
கட்டாய மதமாற்றத்தை அரசியலமைப்பு அனுமதிக்கவில்லை: அலகாபாத் ஐகோர்ட்
-
மருமகனுக்கு மீண்டும் பதவி கொடுத்த மாயாவதி
-
அரசியல் செய்ய வேண்டாம்!
-
ஹைதராபாதில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள் கைது
-
விருதுநகர் சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து; பொருட்கள் சேதம்