சர்க்கஸ் ஒட்டகம் திருட்டு; ஓட்டிச்சென்றவருக்கு வலை

4


தஞ்சாவூர்; தஞ்சாவூரில் சர்க்கஸ் ஒட்டகத்தை ஓட்டிச் சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.


கரூர் மாவட்டம், வேட்டமலிக்களம் விஜய், தன் குடும்பத்தினருடன் ஊர், ஊராக சர்க்கஸ் நடத்தி வருகிறார். சர்க்கஸ் நிகழ்ச்சிக்காக பறவை, ஒட்டகம் உள்ளிட்ட சில விலங்குகளை வளர்த்து வருகிறார்.

இவர், சில நாட்களாக தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டையில் சர்க்கஸ் நடத்தினார். மே 15 இரவு, சர்க்கஸ் காட்சியை முடித்தார். 16ம் தேதி காலை விஜய் பார்த்தபோது கூடாரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒட்டகத்தை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் ஒட்டகம் கிடைக்கவில்லை.



நேற்று முன்தினம், தஞ்சாவூர் தாலுகா போலீசில் விஜய் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில், புன்னைநல்லுார் மாரியம்மன் கோவில் ஞானம் நகரில் உள்ள 'சிசிடிவி' கேமராக்களில், வேட்டி, சட்டை அணிந்த நபர் ஒருவர் ஒட்டகத்தை ஓட்டிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement