நீதிபதி பணியில் சேர 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி கட்டாயம்; சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி: ''நீதிபதியாக பணியாற்ற, குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும்'' என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, இந்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் ஏ.ஜி. மாசிஹ் மற்றும் கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு:
* நீதித்துறையில் பணியாற்ற குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும்.
* இந்த தீர்ப்பு ஏற்கனவே தொடங்கி தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நீதித்துறை பணியமர்த்தலுக்கு பொருந்தாது.
* அடுத்த முறை தொடங்கப்படும் நியமன நடைமுறையில் இருந்து இந்த தீர்ப்பு பொருந்தும்.
* சிவில் நீதிபதிகள் தேர்வு எழுதும் எந்தவொரு விண்ணப்பதாரரும் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய அனைத்து மாநில அரசுகளும் விதிகளை திருத்தம் செய்ய வேண்டும்.
* மூன்றாண்டுகள் பயிற்சி பெற்றிருப்பதை, 10 ஆண்டுகள் வழக்கறிஞர் பதவியில் உள்ள ஒரு வழக்கறிஞரால் சான்றளிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட வேண்டும்.
* நீதிபதிகளுக்கு சட்ட எழுத்தராக இருந்த அனுபவமும் கணக்கிடப்படும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கறிஞர் பணி அனுபவம் இல்லாத புதிய சட்ட பட்டதாரிகளை நீதித்துறை பணியில் நியமிக்கும் போது பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. எனவே நீதித்துறை பணிக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் உத்தவிட்டுள்ளது.
தலைமைநீதிபதி கவாய் உத்தரவில் கூறுகையில், 'ஒரு நாள் கூட வழக்கறிஞர் பணி அனுபவம் இல்லாதவர்களை நீதிபதிகளாக நியமிக்கும் நடைமுறை 20 ஆண்டுகளாக இருந்தது. இந்த நடை முறை வெற்றிகரமான அனுபவமாக இல்லை.
* நீதிபதிகளாக நியமிக்கப்படுவோர் தங்கள் முதல் பணி நாளில் இருந்தே வாழ்க்கை, சுதந்திரம், சொத்துக்கள் தொடர்பான வழக்குகள், வழக்கு நடத்துவோரின் நற்பெயர் ஆகியவற்றை கையாள வேண்டி உள்ளது.
வழக்கறிஞராக பணியாற்றுவதன் மூலம் கிடைக்ககூடிய அனுபவத்தை வெறும் சட்ட புத்தகம் மூலம் கிடைக்கும் அறிவும், பயிற்சியும் கொடுத்து விட முடியாது என்று தெரிவித்துள்ளார்.





மேலும்
-
உலகின் சிறந்த நன்கொடையாளர்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்தியர்கள்
-
பாருல் சவுத்ரிக்கு டி.எஸ்.பி., பதவி
-
டேபிள் டென்னிஸ்: மணிகா ஏமாற்றம்
-
மஹா.,வில் புனரமைப்பு பணியில் சோகம்: 'ஸ்லாப்' விழுந்து 6 பேர் உயிரிழப்பு
-
போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்பட்ட பூனை: கோஸ்டாரிக்காவில் சிறையில் நுாதன கடத்தல்
-
அசாமில் தேசவிரோத செயலில் ஈடுபட்ட இருவர் கைது: இதுவரை 73 பேருக்கு சிறை!