சென்னை அணி நிதான ஆட்டம்: ராஜஸ்தான் அணிக்கு 188 ரன் வெற்றி இலக்கு

புதுடில்லி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி, 187 ரன்கள் எடுத்தது.

18 வது பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இன்று புது டில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் 62 வது லீக் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை அணியும் ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன.

சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பீல்டிங் தேர்வு செய்தார்.இதனையடுத்து முதலில் களமிறங்கிய சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களான அயூஷ் மாத்ரோ, கான்வே இருவரும் நிதான ஆட்டத்தை கடைபிடித்தனர்.

2வது ஓவரில் சென்னை அணி வீரர் டேவன் கான்வே, உர்வில் படேல் யித்விர் சிங் பந்தில் ஆட்டமிழந்தனர். கான்வே 10 ரன்களில் வெளியேறினார்.

உர்வில் படேல் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.அடுத்து வந்த அஸ்வின், 8 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து அவுட்டானார்.பிரேவிஸ் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அவுட்டானார்.அடுத்து வந்த ஷிவம் துபே, 32 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அவுட்டானார்.அயூஷ் மாத்ரோ, அதிகபட்சமாக 20 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

தோனி 17 பந்துகளில் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.இறுதியில் சென்னை அணி, 8 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.ராஜஸ்தான் அணியின் ஆகாஷ் மத்வால்,யித்விர் சிங் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து ராஜஸ்தான் அணிக்கு 188 ரன் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Advertisement