அசாமில் தேசவிரோத செயலில் ஈடுபட்ட இருவர் கைது: இதுவரை 73 பேருக்கு சிறை!

குவஹாத்தி: பாகிஸ்தானுக்கு ஏஜென்டாக செயல்பட்டதாக, மாநிலத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர், தேச விரோத செயல்களுக்காக கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.

அவர் கூறியதாவது:

தேசவிரோத செயல்பாட்டின் காரணமாக, மாநிலத்தின் சிராங் மற்றும் ஹோஜாய் மாவட்டங்களில் இருந்து தலா ஒருவர் இன்று கைது செய்யப்பட்டனர்.

ஆபரேஷன் சிந்தூரைப் போலவே, தேச விரோதிகளைக் கண்காணித்து தண்டிக்கும் எங்கள் பணி நடந்து வருகிறது. இது வரை ,பாகிஸ்தானுக்கு ஏஜென்டாக செயல்ப்பட்டவர்கள் 73 பேர் இப்போது சிறையில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.


இதற்கு முன்னதாக, பஹல்காம் சம்பவத்தில் பாகிஸ்தானையும் அதற்கு உடந்தையாக இருந்தவர்களை ஆதரித்ததாகக் கூறி எதிர்க்கட்சியான ஏ.ஐ.யு.டி.எப்., எம்.எல்.ஏ., அமினுல் இஸ்லாம் தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.இவ்வழக்கில் ஜாமின் பெற்ற பிறகு, இஸ்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மே 2 அன்று, 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷத்தை எழுப்பியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்றோம். அதன்படி, தற்போது தேசவிரோத செயல்களுக்காக இருவர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement