சுமித் நாகல் வெற்றி * பிரெஞ்ச் ஓபன் தகுதிச்சுற்றில்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர், வரும் மே 25-ஜூன் 8ல் பாரிசில் நடக்க உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடக்கின்றன. ஒற்றையர் தரவரிசையில் 170 வது இடத்திலுள்ள இந்தியாவின் சுமித் நாகல், 141 வது இடத்திலுள்ள அமெரிக்காவின் மிட்செல் குருகரை சந்தித்தார்.
காலிறுதியில் நடந்த முதல் செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றிய சுமித் நாகல், அடுத்த செட்டையும் 6-1 என வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 14 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சுமித் நாகல் 6-1, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

Advertisement